உயர்சாதியினரால் கொல்லப்பட்ட தலித் மூதாட்டி
தலித் சமூகத்தைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் ஆதிக்கசாதியைச் சேர்ந்த மூவரால் உயிரோடு எரிக்கப் பட்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.
ஆதிக்கசாதியினர் பகுதியில் உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் எடுக்கச் சென்ற போது இந்த கொடிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
ஹீராலால், தினேஷ் மற்றும் ராஜேந்திரா என்ற மூவரும் பீரம்பாய் என்ற 55 வயது பெண்மணியை நெருப்பி லிட்டு கொளுத்தினர்.
80 சதவீதம் அந்தப் பெண்மணியின் உடல் எரிந்து விட்டதாக கன்ததா பகுதி யின் காவல்துறை அதிகாரி அபிஷேக் ரஞ்சன் தெரிவித்தார்.
பீரம்பாய் உயிரோடு கொளுத்தப்பட்ட செய்தி கன்ததா பகுதி முழுவதும் பரவி யது. பெரும் போராட்டத்திற்கு பிறகே படுகொலையாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தீயிலிடப்பட்ட பெண்மணியின் கணவரான ஹுகும் சந்த் தெரிவித்தார்
Monday, June 30, 2008
சமிபத்தில் திமுக மகளிர் அணி மாநாடு நடைபெற்றது அதில் மகளிர் முன்னேற்றம் குறித்து விவாவதக்கப்பட்டு இறுதியில் நல்ல பல தீர்மாணங்களை போட்டனர். அதில் ஒன்றுதான் திரைப்படங்களில் பெண்களை வைத்து ஆபாச காட்சிகளை எடுக்க கூடாது என்று, நல்ல தீர்மாணம்தான் இதுவரை பெண்களின் தொப்புளில் ஆம்புளட் போட்ட காட்சிகளையும், பம்பரம் விட்ட காட்சிகளையும் மேலும் மேலும் மெருகூட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் மானாட மயிலாட நிகழ்(ச்சி) நடத்தி செம்மொழியாம் தமிழை அயராது வளர்த்து வரும் நம் கலைஞர் டி வி யை மறந்துட்டிங்கள சாமியோ
Subscribe to:
Posts (Atom)